மாவட்ட செய்திகள் ஜூலை 27,2022 | 00:00 IST
மதுரவாயல், கங்கா நகரை சேர்ந்தவர் லட்சுமணன் இவரது மனைவி சுனிதா. நேற்று வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றனர். இரவு வீட்டிற்கு வந்தபோது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 12 பவுன் நகை ரூ. 20 ஆயிரம் பணம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த புகாரில் மதுரவாயல் போலீசார் பணம், நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
வாசகர் கருத்து