மாவட்ட செய்திகள் ஜூலை 27,2022 | 18:00 IST
விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி, எ.வடக்குப்பம், பெரிய வடவாடி, விஜயமாநகரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் ஆடிப்பட்டத்தில், வேர்க்கடலை சாகுபடி செய்திருந்தனர். போதிய மழையின்றி வேர்க்கடலை செடிகள் கருகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், விருத்தாசலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் வேர்க்கடலை சாகுபடி செய்துள்ள நிலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கின்றது. இதனால் வேர்க்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து