மாவட்ட செய்திகள் ஜூலை 27,2022 | 18:00 IST
கோவையில் ஒய்.எம்.சி.ஏ. சார்பில், 66 வது மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி ஒய்.எம்.சி.ஏ. கூடைப்பந்து மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் மினி பாய்ஸ், ஜூனியர் பாய்ஸ் மற்றும் பெண்கள் பிரிவுக்கான போட்டிகள் நிறைவடைந்தது. தற்போது ஆண்கள் பிரிவுக்கான போட்டிகள் நடக்கிறது. 2 ம் சுற்றுப் போட்டியில் யுனைடெட் அணி 61-38 என்ற புள்ளி கணக்கில், மிராக்கிள் அணியை வென்றது. 2 வது போட்டியில் ஒய்.எம்.சி.ஏ. அணி 79-67 என்ற புள்ளி கணக்கில் சுகுணா அணியை வென்றது. 3 வது போட்டியில் அன்னுார் பி.பி.சி. அணி 73-60 என்ற புள்ளி கணக்கில் பெர்க்ஸ் அணியை வென்றது.
வாசகர் கருத்து