மாவட்ட செய்திகள் ஜூலை 27,2022 | 18:56 IST
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஈஞ்சாரையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் விருநகர் மொட்டமலையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் எஸ்ஐயாக வேலை பார்க்கிறார். இந்தியா உட்பட பல்வேறு வெளிநாடுகளில் நடந்த பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். தற்போது நெதர்லாந்து நாட்டில் சர்வதேச அளவில் போலீசாருக்கான தடகளப் போட்டிகள் நடந்தது. இதில் எஸ் பி மயில்வாகனன் தலைமையில் 12 போலீசார் பங்கேற்றனர். முதல் நாளில் நடந்த 5,000 மீட்டர்கள் வேக நடை போட்டியில் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தார். அவரை போலீஸ் அதிகாரிகள் வாழ்த்தினர். கடந்தாண்டு சீனாவில் நடந்த சர்வதேச வேக நடை போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து