Advertisement

திரைப்பட உரிமம் தருவதாக ரூ.50லட்சம் மோசடி! தயாரிப்பாளர் மீது வழக்கு

மாவட்ட செய்திகள் ஜூலை 29,2022 | 00:00 IST

Share

சேலம் மாவட்ட சினிமா விநியோகஸ்தரும் 7ஜி ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவன உரிமையாளருமான செந்தில்குமார் திரௌபதி, ஈஸ்வரன், ருத்ர தாண்டவம், இடியட்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்து விநியோகம் செய்து வருகிறார். இவர் மீது புதுச்சேரி சண்முகா சினிமாஸ் மேலாளர் சுரேஷ் புதுச்சேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்... அதில், செந்தில்குமார் ருத்ரத் தாண்டவம் மற்றும் இடியட்ஸ் படத்திற்கான தென்னார்க்காடு மற்றும் வடாற்காடு மாவட்ட சினிமா விநியோக உரிமம் தருவதாக கூறி 50 லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு, அவரே படத்தை விநியோகம் செய்து உள்ளதாக தெரிவித்துள்ளார். இதை விசாரித்த புதுச்சேரி கோர்ட் செந்தில்குமார் மீது வழக்கு பதிய உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் தயாரிப்பாளர் செந்தில்குமார் மீது புதுச்சேரி போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X