மாவட்ட செய்திகள் ஜூலை 29,2022 | 00:00 IST
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார கிராமங்களில் யானை பாகுபலி அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடமாடி வந்தாலும் மனிதர்களை தாக்கியதில்லை. விவசாய பயிர்களை சேதப்படுத்துவதால் யானையை காட்டுக்குள் விரட்ட வலியுறுத்தி வருகின்றனர் கடந்த ஒரு மாதமாக அதன் நடமாட்டம் இல்லை. இன்று அதிகாலை மீண்டும் சமயபுரம் பகுதியில் இயல்பாக நடந்து வந்தது. பாகுபலியை கண்டு கிராம மக்கள் வீடுகளுக்குள் புகுந்து கதவை மூடிக் கொண்டனர். மெதுவாக வந்த பாகுபலி வாகனங்கள் வருகிறதா என கவனித்து பின்னர் மெயின் ரோட்டை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது.
வாசகர் கருத்து