பொது ஜூலை 30,2022 | 11:13 IST
திருச்சியில் 47 வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி ஆயுதப்படை ரைபிள் கிளப்பில் நடக்கிறது. கடந்த 27 ம் தேதி நடிகர் அஜித் மாஸ்டர் பிரிவில் பங்கேற்றார். 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் சுடுதளம் மற்றும் பிஸ்டல் பிரிவில் பங்கேற்று அசத்தினார். இந்த போட்டியில் 3 பேரை கொண்ட அஜித் அணி சென்டர் ஃபயர் பிஸ்டல் மாஸ்டர் பிரிவில் தங்கப் பதக்கம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் பிரிவில் தங்கப்பதக்கம், 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் மாஸ்டர் பிரிவில் தங்கப் பதக்கம், ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றது. 50 மீட்டர் பிஸ்டல் பிரிவு, ஸ்டாண்டர்ட் பிஸ்டல் பிரிவு ஆகியவற்றில் வெண்கலப்பதக்கத்தையும் அஜித் அணி வென்றது. பரிசளிப்பு விழா நாளை நடக்கிறது.
வாசகர் கருத்து