பொது ஜூலை 30,2022 | 15:08 IST
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்நாட்டு டி20 கிரிக்கெட் லீக் போட்டி நடந்தது. பந்த் இ அமீர் டிராகன்ஸ் மற்றும் பமீர் ஷல்மி Pamir Zalmi and Band-e-Amir Dragons அணிகள் மோதின. போட்டி நடந்தபோது பார்வையாளர்கள் அமர்ந்திருந்த ஒரு கேலரியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. அது கையெறி குண்டு என்பது உறுதியானது. பார்வையாளர்கள் 4 பேர் படுகாயமடைந்தனர். இதனால் உண்டான பதற்றத்தால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. காயமடைந்தவர்கள் ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். வீரர்கள், வெளிநாட்டவர்கள் பத்திரமாக உள்ளனர் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. ஆப்கனில் ஆட்சி அதிகாரம் தலிபான்கள் கைக்கு வந்த பிறகு நடக்கும் முதல் டி20 டோர்னமென்ட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து