மாவட்ட செய்திகள் ஜூலை 30,2022 | 00:00 IST
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பேரளம் பஸ் நிறுத்தத்தில் பேரளம் வாய்க்கால் தெரு பகுதியை சேர்ந்த மாதவன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். மக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இடையூறாக அரிவாள் வடிவம் கொண்ட கேக்கை பேருந்து நிறுத்தத்தில் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி நண்பர்களுடன் அலப்பறையில் ஈடுபட்டார். இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலானது. பேரளம் போலீஸார் பொது இடத்தில் மக்களுக்கு இடையூறாக கேக் வெட்டி கெத்து காட்டிய அஜய் குமார் 27, மணிகண்டன் 19, விஷ்ணு 19, பிரசாத் 26 ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பர்த்டே பாய் மாதவன் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்
வாசகர் கருத்து