மாவட்ட செய்திகள் ஜூலை 30,2022 | 00:00 IST
கோவை ஒய்.எம்.சி.ஏ. சார்பில் 66 வது மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி ஒய்.எம்.சி.ஏ. கூடைப்பந்து மைதானத்தில் நடக்கிறது. இதில் 32 அணிகள் லீக் முறையில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆர்.எல்.எம்.எச்.ஏ. 'ஏ'அணி 72 - 64 என்ற புள்ளிக் கணக்கில் பாரத் கூடைப்பந்து அணியை வென்றது. ஆர்.எல்.எம்.எச்.ஏ. அணியின் அட்னரிஸ் பிரேம்சன் 23 புள்ளிகள் பெற்றார். 2 வது போட்டியில் கோவை டெரியர்ஸ் அணி 45 - 43 என்ற புள்ளிக் கணக்கில் ஜெயபாரதி அணியை வென்றது. கோவை டெரியர்ஸ் அணியின் மகேந்திரன் 21 புள்ளிகள் பெற்றார். 3 வது போட்டியில் யுனைடெட் கூடைப்பந்து அணி 75 - 40 என்ற புள்ளிக் கணக்கில் சதர்ன் வாரியர்ஸ் அணியை வென்றது. ஒய்.எம்.சி.ஏ. அணி 74 - 42 என்ற புள்ளிக் கணக்கில் ஆர்.எஸ்.சி. அணியை வென்றது. ஒய்.எம்.சி.ஏ. அணியின் கேலிஸ்டஸ் ஜெரார்டு 16 புள்ளிகள் பெற்றார். வெற்றி பெற்ற அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
வாசகர் கருத்து