மாவட்ட செய்திகள் ஜூலை 30,2022 | 00:00 IST
தமிழக பகுதிகளில் வளிமண்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. திருவாரூர். சேந்தமங்கலம், நன்னிலம்உள்ளிட்ட பல இடங்களில் இன்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வருகிறது. கனமழையால் திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட வடக்கு வீதி, தெற்கு வீதி, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் பணி முடிந்து வீடு செல்வோர் அவதிக்குள்ளாகினர். மழை தொடர்ந்தால் பருத்தி வயல்களில் மழை நீர் தேங்கி பருத்திப் பயிர்கள் மிகவும் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து