பொது ஜூலை 31,2022 | 10:13 IST
44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்றில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வென்றது. 2வது சுற்றிலும் இந்திய அணிகள் அசத்தின. ஆண்கள் பிரிவில் இந்திய ஏ அணி மால்டோவா அணியை வீழ்த்தி 4ல் 3.5 புள்ளி பெற்றது. எஸ்டோனியாவை வென்ற பி அணிக்கு 4 புள்ளி கிடைத்தது. இதே போல இந்திய 'சி'அணி, மெக்சிகோவை வீழ்த்தி 2.5 புள்ளி பெற்றது. பெண்கள் பிரிவில் அர்ஜென்டினா, லாட்வியா, சிங்கப்பூர் அணிகளை வென்ற இந்தியாவின் ஏ, பி, சி அணிகள் முறையே 3.5, 3.5, 3 புள்ளிகளை பெற்றன. குறிப்பாக தமிழக வீரர்கள் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, ஶ்ரீநாத் நாரயணன், சசிகிரண், குகேஷ், அதிபன், சேதுராமன், கார்த்திகேயன் முரளி வென்றனர். வீராங்கனைகள் வைஷாலி, தனியா சச்தேவ், நந்திதா உள்ளிட்டோருக்கும் வெற்றி கிடைத்தது. இதுவரை இந்திய அணிகள் விளையாடிய 12 போட்டிகளிலும் தொடர் வெற்றி கிடைத்துள்ளது.
வாசகர் கருத்து