மாவட்ட செய்திகள் ஜூலை 31,2022 | 00:00 IST
கோவையில் பிரண்ட்ஸ் அறக்கட்டளை மற்றும் சோ அவேர் அறக்கட்டளை சார்பில் 'ஓடு கல்விக்கு கைகொடு' என்ற தலைப்பில் மினி மராத்தான் போட்டி கோவை புதுாரில் நடைபெற்றது. 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்போட்டி கோவை புதுார் 'ஏ'மைதானத்தில் துவங்கி சி.எஸ். அகாடமி வரை நடந்தது. 3 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றோருக்கு பதக்கம், கோப்பை வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மாரத்தான் போட்டி மூலம் திரட்டப்பட்ட நிதி கோவிட் தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்வி கட்டணம் செலுத்த பயன்படுத்தப்படும் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து