மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 01,2022 | 18:45 IST
தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், 16 வயதுக்குட்பட்ட மாணவ - மாணவியருக்கான மண்டல கூடைப்பந்து போட்டிகள் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. கோவை மண்டலத்துக்குட்பட்ட பிரிவில் நீலகிரி, தருமபுரி, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், சேலம், கோவை உள்ளிட்ட மாவட்ட அணிகள் இடம் பெற்றுள்ளன. கோவை மண்டலத்துக்கு உட்பட்ட போட்டிகள், காளப்பட்டி சுகுணா பள்ளி மைதானத்தில் நடக்கிறது. மாணவர்கள் பிரிவில், கோவை மாவட்ட 'ஏ' அணி, 101- 61 என்ற புள்ளிக்கணக்கில் ஈரோடு மாவட்ட அணியை வென்றது. 2வது போட்டியில் சேலம் 'பி' அணி, 86-59 என்ற புள்ளிக்கணக்கில் கோவை மாவட்ட 'பி' அணியை வென்றது. மாணவிகள் பிரிவில் முதல் போட்டியில் சேலம் மாவட்ட அணி, 49-17 என்ற புள்ளி கணக்கில், நீலகிரி அணியையும்; 2வது போட்டியில் கோவை 'ஏ' அணி, 74-40 என்ற புள்ளி கணக்கில், கோவை 'பி' அணியையும் வென்றன.
வாசகர் கருத்து