Advertisement

5லட்சம் லிட்டர் பால் திருடிய ஆவின் அண்ணாமலை காட்டம்

அரசியல் ஆகஸ்ட் 02,2022 | 08:28 IST

Share

ஆவினில் மக்கள் கொடுக்கும் பணத்திற்கு குறைவாக பால் வழங்க காரணமான அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார். அரசு நிறுவனமே மக்களுக்கு வழங்கும் அரை லிட்டர் பாலில் 70 மி.லி., அளவை குறைத்து வழங்கிய அதிர்ச்சி தகவல் ஆதாரத்துடன் வெளியாகி இருக்கிறது. வெறும் 70 மி.லி., தானே குறைந்தது என்றும், தெரியாமல் நடந்து விட்டது என்றும் யாரும் தப்பிக்க முடியாது. தமிழகத்தில் 70 லட்சம் அரை லிட்டர் பால் பாக்கெட் தினமும் விற்பனையாகிறது. ஒரு பாக்கெட்டில் 70 மி.லி. என்றால், 3.08 ரூபாய் குறைய வேண்டும். தினமும் 2.16 கோடி ரூபாய் அளவுக்கு மக்களின் பணம் கொள்ளை போயிருக்கிறது. இயந்திர கோளாறால் ஏற்பட்ட தவறு என்று ஒரு பேச்சுக்காக வைத்து கொண்டால், தவறு நடந்த முதல் நாளே 5 லட்சம் லிட்டர் பால் மிச்சமாகி இருக்குமே. இந்த அதிக பால் எங்கே போனது? இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். தி.மு.க., ஆட்சியில் தினமும் புதுப்புது ஊழல்கள் முளைக்கின்றன என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X