மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 02,2022 | 16:10 IST
கரூர் மாவட்டம் தோகைமலை சுற்று வட்டார கிராமங்களை சார்ந்த தொழிலாளர்கள், டெக்ஸ்டைல் பார்க்கில் செயல்படும் ஜவுளி துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். இன்று காலை 20 தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு தோகைமலையிலிருந்து டெக்ஸ்டைல் பார்க் நோக்கி வேன் சென்றது. மதுக்கரை அருகில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்கு முற்பட்ட போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்தானது. அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்
வாசகர் கருத்து