Advertisement

ரங்கசாமி பிறந்தநாள் தொண்டர்கள் உற்சாகம்!

மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 04,2022 | 12:41 IST

Share

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு இன்று 72-வது பிறந்த நாள். ரங்கசாமிக்கு பிறந்தநாள் என்றால் ஆண்டுதோறும் தொண்டர்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வாழ்த்து பேனர் மற்றும் கட் அவுட்டுகள் வைப்பர். இந்த ஆண்டு பொன்னியின் செல்வன், ஆர் ஆர் ஆர்,கபாலி போன்ற திரைப்படங்களில் வரும் கதாநாயகரை போல முதல்வரை சித்தரித்து பேனர்கள் வைத்து தொண்டர்கள் மகிழ்ந்துள்ளனர். புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் இருந்தும் புதுச்சேரி முழுவதும் ரங்கசாமியின் பேனர்களால் நிறைந்துள்ளது. ரங்கசாமிக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, கவர்னர் தமிழிசைஉள்ளிட்ட தலைவர்கள் தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். பிறந்தநாளை முன்னிட்டு, ரங்கசாமி தனது ஆன்மீக குருவான அப்பாபைத்தியசாமிக்கு பூஜை செய்து தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் பிரசாதங்களை வழங்கினார். அப்போது அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர். கட்சி தொண்டர்களால் புதுச்சேரி முழுவதும் அன்னதானங்களும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது, நேற்று இரவு 12 மணிக்கு தொண்டர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நடனமாடிகொண்டாடினர். புதுச்சேரி கட்சி தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ரங்கசாமிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X