மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 04,2022 | 00:00 IST
சென்னை, எம்கேபி நகர், வியாசர்பாடி பகுதிகளில் பெட்டிக்கடை, பிளாட்பார்ம் கடைகளுக்கு மர்ம நபர் குட்கா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி கலத்தில் இறங்கிய போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் முகமது அனிபா (48) மடக்கி பிடித்து விசாரணை செய்தபோது சில குட்கா பொருட்கள் இருந்தது. மேலும் விசாரித்ததில் இவர் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதியிலிருந்து மொத்தமாக குட்கா பொருட்களை வாங்கி கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இவரிடமிருந்து 10 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து. அனிபா மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து