Advertisement

காமன்வெல்த் மல்யுத்தம் இந்தியா 3 தங்கம் அள்ளியது

விளையாட்டு ஆகஸ்ட் 06,2022 | 06:43 IST

Share

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று மல்யுத்த போட்டியின் 4 பிரிவுகளில் இறுதிப்போட்டி நடந்தது. ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, கனடாவின் லச்லான் மெக்னில் மோதினர். இதில் 4-க்கு 0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை பஜ்ரங் புனியா வென்றார். ஆண்களுக்கான 86 கிலோ எடைப்பிரிவில் தீபக் புனியா தங்கம் வென்றார். 3க்கு -0 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தான் வீரர் Muhammad Inam முகமது இனாமை வீழ்த்தினார். மகளிருக்கான 62 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஷாக்சி மாலிக் 4-க்கு 0 என்ற புள்ளி கணக்கில் கனடாவின் Ana Godinez Gonzalez அனா கோடினெசை தோற்கடித்து தங்கம் வென்றார். பெண்களுக்கான 57 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அன்ஷு மாலிக், நைஜீரிய வீராங்கனை ஓடுனயோவிடம் (Odunayo 4க்கு 6 என்ற புள்ளி கணக்கில் தோற்றார். அன்ஷுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் 9 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலத்துடன் இந்தியா பதக்க பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X