மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 07,2022 | 11:42 IST
பெரியாறு அணையின் நீர்மட்டம், 137 அடியாக அதிகரித்த நிலையில், ஆகஸ்டு 5ல் இடுக்கி அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 'ரூட் கர்வ்' மூலம் திறந்து விட வேண்டும் என கேரள முதல்வர், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியதன் அடிப்படையில் திறந்துள்ளனர். இதன் மூலம், ஐந்து மாவட்ட விவசாயிகளின் 2 ஆண்டு கால நம்பிக்கையை அரசு சீர்குலைத்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்படும். இது தொடர்ந்தால், ஐந்து மாவட்ட மக்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் எச்சரித்துள்ளார்.
வாசகர் கருத்து