Advertisement

சைக்ளிங் போட்டி ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு

மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 07,2022 | 13:54 IST

Share

கோவையில் நேரு கல்வி குழுமம், மாவட்ட அமெச்சூர் சைக்ளிங் அசோசியேஷன் மற்றும் கோவை பெடலர்ஸ் சைக்ளிங் க்ளப் சார்பில் ஹண்ட் பாஃர் டேலண்ட் சைக்ளிங் போட்டி நடந்தது. நேரு கல்வி குழும செயலர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். சிறப்பு காவல் படை கமாண்டன்ட் செந்தில்குமார் துவக்கி வைத்தார். இதில் 6 முதல் 23 வயது வரை ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். 8 பிரிவுகளாக நடந்த போட்டியில் 500 பேர் பங்கேற்றனர். ஸ்லோ சைக்ளிங் போட்டியும் நடந்தது. 6 வயதுக்கு உட்பட்டோருக்கு 300 மீட்டர் துாரம், 8 வயதுக்கு உட்பட்டோருக்கு 800 மீட்டர், 10 வயதுக்கு உட்பட்டோருக்கு 1,200 மீட்டர், 12 வயதுக்கு உட்பட்டோருக்கு 2 கிலோ மீட்டர். 14 வயதுக்கு உட்பட்டோருக்கு 5 கிலோ மீட்டர், 16 வயதுக்கு உட்பட்டோருக்கு 6 கிலோ மீட்டர், 18 வயதுக்கு உட்பட்டோருக்கு 8 கிலோ மீட்டர், 23 வயதுக்கு உட்பட்டோருக்கு 10 கிலோ மீட்டர் என போட்டிகளின் எல்லை துாரம் நிர்ணயிக்கப்பட்டது. வெற்றி பெற்றோருக்கு முதல் பரிசு 3 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 2 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாய் என மொத்தம் 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுகள், சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X