Advertisement

பரந்துார் ஏர்போர்ட் திட்டம் சுற்றுவட்டார மக்கள் கவலை

பொது ஆகஸ்ட் 09,2022 | 10:04 IST

Share

சென்னையின், 2வது விமான நிலையமான பரந்துார் விமான நிலையத்திற்காக 12 கிராமங்களில் 4,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஏகனாபுரம் கிராம மக்கள் காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். விமான நிலையத்துக்கான வரைபடத்தில் நாங்கள் வசித்து வரும் 600 வீடுகளும் இடம்பெற்றுள்ளன. ஏகனாபுரம் கிராமத்தின் மொத்த பரப்பளவான 950 ஏக்கரில், குடியிருப்பு பகுதிகளாக உள்ள 50 ஏக்கர் பகுதியை மட்டும் விடுவிக்க வேண்டும். மீதமுள்ள நிலங்களை உரிய இழப்பீடு வழங்கி கையகப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X