Advertisement

ஆனந்தவல்லி கோயிலில் ஆடித்தபசு திருவிழா

மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 09,2022 | 11:29 IST

Share

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லி சமேத சோமநாதர் கோயில் பிரசித்தி பெற்றது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டது. இக்கோயிலில் ஆடித்தபசு விழா 10 நாட்கள் விமரிசையாக நடப்பது வழக்கம். கோவிட் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விழா நடக்கவில்லை. இந்தாண்டிற்கான விழா கடந்த ஜூலை 31 ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மன், சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு விழா விமரிசையாணக நடைபெற்றது. அலங்காரச் சப்பரத்தில் சர்வ அலங்காரத்தில் அம்மன், சுவாமி எழுந்தருளினர். அதைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. சப்பரத்திற்கு முன்பு தேங்காய்களை உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சப்பரத்தை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து ரத வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X