Advertisement

உலகுடைய அம்மன் கோயிலில் ஆடி முளைப்பாரி திருவிழா

மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 11,2022 | 18:52 IST

Share

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தெக்கூர் உள்ள உலகுடைய அம்மன் கோயில் ஆடி முளைப்பாரி திருவிழா கடந்த ஆகஸ்ட் 1 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பெண் பக்தர்கள் மற்றும் சிறுமிகள் முளைப்பாரிகளை வளர்த்து வருகின்றனர். அவற்றை தினமும் இரவு தெக்கூர் முளைக்கொட்டு திண்ணையில் வைத்து பாரம்பரிய கும்மி பாட்டு பாடியும், சிறுவர்கள் சிலம்பாட்டம் ஆடியும், கும்மி கொட்டி அம்மனை வழிபட்டனர். பெண் பக்தர்கள் மற்றும் சிறுமிகள் புத்தாடைகள், நகைகள் அணிந்து ஊர்வலமாக முளைப்பாரிகளை சுமந்து வந்து கைலாசநாதர் கோமதி அம்மன், உலகுடைய அம்மன் கோயில்களில் இறக்கி வைத்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து முளைப்பாரிகளை உப்பாற்றில் கரைத்தனர். மழை பெய்து விவசாயம் செழிக்கவும், திருமண வரம், கிராம மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டி இத்திருவிழா பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X