Advertisement

விவேகானந்தருக்கு கும்பகோணத்தில் சிலை

மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 16,2022 | 11:56 IST

Share

தஞ்சாவூர் கும்பகோணத்தில் 1897ம் ஆண்டு மூன்று நாள்கள், போர்ட்டர் டவுன் ஹாலில், 'வேதாந்தப் பணி' என்ற தலைப்பில், சுவாமி விவேகானந்தர் உரையாற்றினார். அதை நினைவுகூறும் வகையில், 7 அடி உயர வெண்கல சிலை திறக்கப்பட்டது. கும்பகோணம் எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி ராமகிருஷ்ண மடம் மூத்த துறவி சுவாமி ஆத்மகனானந்தர் சுவாமி, தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் விமூர்த்தானந்தர் விவேகானந்தர் சிலையை திறந்து வைத்தனர். கோல்கட்டா உலகளாவிய ராமகிருஷ்ண மடம் துணைப்பொதுத்தலைவர் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ் 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் ஆசியுரையாற்றினார். நிகழ்ச்சியில், கும்பகோணம் முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி வெங்கடேச பெருமாள், சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் காமகோடி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X