மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 17,2022 | 00:00 IST
நாமக்கல் மாவட்டம் கொக்கராயம்பேட்டை அருகே அம்மாசிபாளையத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்-கை அகற்றக்கோரி கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் திருச்செங்கோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திருச்செங்கோடு டிஎஸ்பி மகாலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தினார். டாஸ்மாக்-கை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வாசகர் கருத்து