மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 18,2022 | 00:00 IST
நாகை அடுத்த வடக்கு பொய்கைநல்லுாரைச் சேர்ந்தவர் மனோகர்,41. தொழிலதிபர். இவர் நேற்று இரவு, வேளாங்கண்ணியில் தனக்கு சொந்தமான நிதி நிறுவன அலுவலகத்தில், நண்பர் மணிவேல் என்பவருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அலுவலகத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், அரிவாளால் சரமாரியாக மனோகரை வெட்டினர். தடுக்க முயன்ற மணிவேலுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் சம்பவ இடத்திலே மனோகர் இறந்தார். இதனால் அ ப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வாசகர் கருத்து