Advertisement

கஞ்சா விற்பனை காட்டிகொடுத்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு

மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 18,2022 | 14:17 IST

Share

காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை  பகுதியை சேர்ந்தவர் விக்கி. வயது 27. புகைப்பட கலைஞர். இரவு வீட்டின் வெளியே நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், பட்டா கத்தியால் விக்கியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விக்கியை மீட்டு, அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஓரிக்கை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பது குறித்து விக்கி போலீசுக்கு தகவல் கொடுத்திருந்தார். அதனை வைத்து கடந்த மாதம் 4 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். கொலை முயற்சியின் பின்னணியில் கஞ்சா கும்பல் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X