Advertisement

கூடலூர் - ஊட்டி சாலையில் விரிசல்

மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 18,2022 | 00:00 IST

Share

நீலகிரி மாவட்டம் கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை சனீஸ்வரன் கோயில் அருகே சில தினங்களுக்கு முன் சாலையில் விரிசல் ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் செல்வம், சேலம் தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் குப்புசாமி, உதவி கோட்ட பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் பிரேம்குமார் ஆய்வு செய்தனர். ஆய்வில் சாலையில் 80 மீட்டர் தூரம் வரை விரிச்சல் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தனர். சாலையின் 100 மீட்டர் தாழ்வான பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் வரை விரிசல் நீட்டித்துள்ளதை கண்டு பிடித்தனர். இந்த விரிசல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் டிரைவர்கள் அச்சத்தில் உள்ளனர். இப்போதைக்கு சாலையில் வாகனங்கள் செல்வதால் பாதிப்பு இல்லை. புவியியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரவித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X