Advertisement

யோகாவில் சாதனை படைத்த மாணவி!

மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 18,2022 | 00:00 IST

Share

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சரவணன்,மலர்விழி தம்பதியர் மகள் ஜோதிஷா. ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி, ஆராய்ச்சி மையத்தில் ஐந்து ஆண்டுகளாக யோகா பயின்று வருகிறார். இவர், ஒரு நிமிடத்தில், 28 முறை, கண்டபேருண்டாசனத்தில் இருந்து சக்கர பந்தாசனத்திற்கு மாறியதன் மூலம் உலக சாதனை படைத்தார். இவரது சாதனை, ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்', ‛வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்', ‛அசிஸ்ட் உலக சாதனை', ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தன. சாதனை படைத்த மாணவி ஜோதிஷா, அவரது யோகா பயிற்சியாளர் சந்தியா ஆகியோரை சக மாணவர்கள், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X