பொது ஆகஸ்ட் 20,2022 | 11:53 IST
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் , விழுப்புரம் - செங்கல்பட்டு மாவட்ட எல்லையான ஓங்கூரில் இருந்து 1 கிலோமீட்டரில் ஓங்கூர் பழைய பாலம் உள்ளது. நான்கு வழி சாலை அமைப்பதற்கு முன் கட்டியதால், சென்னை மற்றும் விழுப்புரம் மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் பாலம் வழியாக சென்றன. பாலம் கட்டி 30 ஆண்டுகள் கடந்த நிலையில், வாகனங்கள் செல்லும் போது அதிர்வு ஏற்படுவதால் அச்சம் அடைந்தனர். ஆய்வு செய்த போது சிமெண்ட் தூணுக்கு மேல் உள்ள பேரிங் பேடு சேதமடைந்தது தெரிந்தது. சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் , சென்னையில் இருந்து டோல்கேட்டை கடந்து விழுப்புரம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஓங்கூர் கூட்ரோடு வரை , எதிர் திசையில் பயணிக்கின்றனர். தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு செல்ல தென் மாவட்டங்களுக்கு பலர் படை எடுத்துள்ளனர் . இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 10 கிலோ மீட்டர் தூரம் வரை ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.30 நிமிடத்துக்கும் மேல் ஆகிறது. பாலம் சீரமைக்கும் பணி நடப்பது குறித்து அறிவிப்பு பலகை இல்லை. எதிர் சாலையில் செல்ல வேண்டியதை குறிப்பிட வழிகாட்டும் பலகையும் இல்லை. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும் , சாலை பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கை.
வாசகர் கருத்து