பொது ஆகஸ்ட் 20,2022 | 15:18 IST
தஞ்சை விளார் பகுதியை சேர்ந்த இளம்பெண் விவாகரத்து ஆனவர்களுக்கான மேட்ரிமொனியில் வெப்சைட்டில் பதிவு செய்து இருந்தார். கும்பகோணத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் இவரை திருமணம் கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். இருவரும் சந்தித்து பேசினர். சந்தோஷ் அவரை காரில் வெளியே அழைத்து சென்றார். அப்போது பெண்ணுடன் தவறாக நடந்து கொள்ள முயன்றார். பெண் கூச்சலிட்டத்தும் , வாயை அடைத்து கடத்த முயற்சித்தான். கார் கண்ணாடி வழியே இதை பொதுமக்கள் இதை பார்த்ததும், வாகனத்தை மறித்தனர். சந்தோஷ் மற்றும் கார் டிரைவர் தப்பினர். பெண்ணை பொதுமக்கள் மீட்டனர். போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
வாசகர் கருத்து