மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 20,2022 | 00:00 IST
நீலகிரி மாவட்டம் தேவாலா அரசு பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை தேவாலா டி.எஸ்.பி. செந்தில்குமார் துவக்கி வைத்தார். விழிப்புணர்வு வாசக பதாகைகள் மற்றும் போதை அரக்கன் வேடம் அணிந்து மாணவர்கள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பஜார் பகுதியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம் நடத்தி அசத்தினர். பள்ளியில் தலைமை ஆசிரியர் சுசீலா தலைமையில் போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஓவிய கண்காட்சி நடந்தது. இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம், எஸ்ஐ சங்கர் பங்கேற்றனர். அதேபோல் பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் தண்டபாணி தலைமையில் நடந்தது.
வாசகர் கருத்து