மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 21,2022 | 00:00 IST
மதுரை சினி ப்ரியா தியேட்டரில் நடிகர் கார்த்தி நடித்த விருமன் திரைப்பட வெற்றி விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து நடிகர்கள் கார்த்தி, சூரி, டைரக்டர் முத்தையா, 2 டி நிறுவனத்தை சேர்ந்த பாலா உள்ளிட்ட படக்குழுவினர் உசிலம்பட்டி பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன், விருமன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். கோயில் சார்பில் படக்குழுவினருக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து பரிவட்டம் கட்டி பூசாரிகள் மரியாதை செய்தனர். நடிகர்கள் வருகையை அறிந்த ஏராளமான ரசிகர்கள் கோயில் முன் திரண்டனர். கார்த்தி, சூரியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். விருமன் படத்தின் டைட்டில் மற்றும் முதல் பாடலில் பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மாசிபச்சை திருவிழா காட்சிகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து