மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 22,2022 | 00:00 IST
கோவை, அல்வேர்ணியா பள்ளி சார்பில், பள்ளி மாணவிகளுக்கான ஒன்பதாம் ஆண்டு 'அல்வேர்ணியா சுழற்கோப்பைக்காக' மாநில அளவிலான போட்டி பள்ளி வளாகத்தில் இன்று துவங்கியது. சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் ஆகிய 2 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சப் ஜூனியர் பிரிவில், 13 அணிகளும், ஜூனியர் பிரிவில் 6 அணிகளும் பங்கேற்றன. இன்றைய போட்டியில் ஜூனியர் பிரிவு போட்டியில், கோவை சி.சி.எம்.ஏ., அணி 53 - 31 என்ற புள்ளிக்கணக்கில் ஈரோடு ராஜேந்திரா அணியையும், சேலம் செயிட் ஜோசப் அணி, 45 - 26 என்ற புள்ளிக்கணக்கில் அல்வேர்ணியா பள்ளி அணியையும் துாத்துக்குடி ஹோலிகிராஸ் பள்ளி அணி, 47 - 14 என்ற புள்ளிக்கணக்கில், கோவை சுகுணா பிப் அணியையும் வீழ்த்தின. சப்-ஜூனியர் பிரிவில், பீபால் பள்ளி அணி, 30 - 08 என்ற புள்ளிகணக்கில் அல்வேர்ணியா 'சி' அணியை வீழ்த்தியது.
வாசகர் கருத்து