மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 23,2022 | 00:00 IST
கோவை அல்வேர்னியா பள்ளி சார்பில் மாணவிகளுக்கான ஒன்பதாம் ஆண்டு அல்வேர்னியா சுழற் கோப்பைக்கான மாநில கூடைப்பந்து போட்டி பள்ளி வளாகத்தில் நடக்கிறது. சப் - ஜூனியர் மற்றும் ஜூனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. சப் ஜூனியர் பிரிவில் 13 அணிகள், ஜூனியர் பிரிவில் ஆறு அணிகள் பங்கேற்றன. ஜூனியர் பிரிவு போட்டியில் துாத்துக்குடி ஹோலி கிராஸ் அணி 75 - 54 என்ற புள்ளிக் கணக்கில் சி.சி.எம்.ஏ., அணியை வென்றது. அல்வேர்னியா பள்ளி அணி 37 - 8 என்ற புள்ளிக் கணக்கில் சுகுணா பிப் பள்ளி அணியை வென்றது. ஈரோடு ராஜேந்திரன் பள்ளி அணி 49 - 37 சேலம் செயின்ட் ஜோசப் அணியை வென்றது. சப் ஜூனியர் பிரிவில் துாத்துக்குடி செயின்ட் தாமஸ் அணி 37 - 16 என்ற புள்ளிக் கணக்கில் விருதுநகர் அரசு பள்ளி அணியை வென்றது.
வாசகர் கருத்து