மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 23,2022 | 00:00 IST
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தங்க நகைகள், ஆபரணங்கள், சொத்து மதிப்புகளின் ஆய்வுகள் நேற்று துவங்கியது. கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையில் ஆறு பேர் கொண்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கோவில் நிர்வாகம் மீதும் கோவில் பொது தீட்சிதர்கள் மீதும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் சில அமைப்புகள் புகார்கள் எழுப்பி வருவதால் தங்களின் வெளிப்படை தன்மை நிரூபிக்கவே இந்த ஆய்வுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம் என கோவில் தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து