மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 23,2022 | 00:00 IST
கோவை பாரதியார் பல்கலையில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் சின்னத்தடாகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வடக்கு குறு மைய விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் 14 வயது பிரிவு ஹேண்ட்பால் இறுதிப் போட்டியில் நரசிம்ம நாயக்கன் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி அணி 16 - 1 என்ற கோல் கணக்கில் ஜி.கே.டி. பள்ளி அணியை வீழ்த்தியது. கூடைப்பந்து இறுதிப் போட்டியில் வித்ய விகாஷினி பள்ளி அணி 16 - 6 என்ற புள்ளிக் கணக்கில் இன்பென்ட் ஜீசஸ் பள்ளி அணியை வீழ்த்தியது. த்ரோபால் போட்டியில் தம்பு பள்ளி அணி 3 - 2 என்ற செட் கணக்கில் ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி அணியை வீழ்த்தி முதலிடத்தை பிடித்தது. வித்ய விகாஷினி பள்ளி அணி 3 - 2 என்ற செட் கணக்கில் எஸ்.எஸ். குளம் அரசு மேல்நிலைப்பள்ளி அணியை வீழ்த்தியது. டேபிள் டென்னிஸ் போட்டியில் சாய் நிகேதன் பள்ளி அணி 3 - 2 என்ற செட் கணக்கில் வித்ய விகாஷினி பள்ளி அணியை வீழ்த்தியது. கோ கோ இறுதிப் போட்டியில் ஜான் போஸ்கோ பள்ளி அணி 16 - 13 என்ற புள்ளிக் கணக்கில் ஹோலி ஏஞ்சல்ஸ் அணியை வீழ்த்தியது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து