மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 24,2022 | 00:00 IST
தேனி மாவட்ட மருத்துவ பிரதிநிதிகள் சங்கம் சார்பில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பைக் விழிப்புணர்வு ஊர்வலம் புது பஸ் ஸ்டாண்டில் துவங்கியது. இந்திய மருத்துவக்கழக தமிழ்நாடு மாநில கௌரவ செயலாளர் தியாகராஜன் துவக்கி வைத்தார். ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பாதாகைகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர். ஹெல்மெட் அணிந்து வந்தோருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பெரியகுளம் பைபாஸ், அன்னஞ்சி விலக்கு, அல்லிநகரம் வழியாக தேனி நேரு சிலை, பங்களாமேடு பகுதியில் ஊர்வலம் நிறைவடைந்தது.
வாசகர் கருத்து