மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 25,2022 | 00:00 IST
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தானிமூலா மற்றும் குந்தலாடி மலை கிராமங்களில் 500 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் குறைந்த மின் அழுத்த பாதிப்பு மற்றும் குடிநீர் கிணற்றுக்கு மின் இணைப்பு இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இப்பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்க வலியுறுத்தி 50 ஆண்டுகளாக போராடி வந்தனர். இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு நெவாக்கோட்டை ஊராட்சி மூலம் தானிமூலா பகுதியில் குடிநீர் கிணற்றுக்கு மோட்டார் அறை கட்டி மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மின் வாரியம் சார்பில் 15 லட்ச ரூபாய் செலவில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இதை எம்.எல்.ஏ. ஜெயசீலன் துவக்கி வைத்தார். கோட்ட பொறியாளர் முத்துக்குமார், உதவி செயற்பொறியாளர் தமிழரசன் கலந்து கொண்டனர். மலைவாழ் கிராமங்களில் தேவையான இடங்களில் டிரான்ஸ்பார்மர்கள் அமைத்து குறைந்த மின்னழுத்தப் பிரச்சனைக்கு தீர்வு காண மின் வாரியம் நடவடிக்கை எடுத்து வருவதை மலைவாழ் மக்கள் பாராட்டினர்.
வாசகர் கருத்து