மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 25,2022 | 00:00 IST
காரைக்கால் மாவட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும்,ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கும் 6 மாதங்களாக ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து புதுச்சேரி அரசே நேரடியாக உள்ளாட்சி துறை மூலம் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் காத்திருப்பு வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கி உள்ளனர். 4வது நாளாக இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர் பேட்டி அய்யப்பன்,தலைவர், கொம்யூன் ஊழியர்கள் சம்மமேளனம்
வாசகர் கருத்து