மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 26,2022 | 00:00 IST
சிதம்பரம் அருகே தோப்பிருப்பு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக கொத்தட்டை விஏஓ பார்த்தசாரதியை அணுகினார். அவர், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பணம் தர விரும்பாத அன்பழகன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய பணத்தை அன்பழகன் கொடுத்தார். அதை பார்த்தசாரதி பெற்றபோது, போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
வாசகர் கருத்து