மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 26,2022 | 00:00 IST
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் வரும் 28 ம் தேதி ஐம்பெரும் விழா தியாகேசர் மைதானத்தில் உதயநிதி தலைமையில் நடக்கிறது. இதன் துவக்க ஆட்டமாக தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் பகல், இரவு கபடி போட்டிகள் நேற்றிரவு துவங்கியது. நாக் அவுட் முறையில் நடந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 75 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் அணிக்கு முதல் பரிசு 2.50 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு 1.50 லட்சம், மூன்றாவது பரிசு 1 லட்சம், நான்காவது பரிசு பெண்கள் அணிக்கு 1 லட்சம், இரண்டாம் பரிசு 75 ஆயிரம், முன்று மற்றும் நான்காம் பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசை உதயநிதி வழங்கவுள்ளார்.
வாசகர் கருத்து