மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 26,2022 | 00:00 IST
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பி.கே.டி. பள்ளி சார்பில் மேற்கு குறுமைய விளையாட்டு போட்டிகள் மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இதில் கூடைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் நடத்தப்பட்டது. மாணவியர் பிரிவு ஹேண்ட் பால் போட்டியில் எம்.எம்.எஸ். அணியும், புரவிபாளையம் அரசுப்பள்ளி அணியும் மோதியது. அதில் எம்.எம்.எஸ். அணி வெற்றி பெற்றது. விவேக் வித்யாலயா அணியும், ரைஸ் மெட்ரிக் பள்ளி அணியும் மோதியது. அதில் ரைஸ் மெட்ரிக் பள்ளி அணி வெற்றி பெற்றது. 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கூடைப்பந்து இறுதி போட்டியில் பி.கே.டி. மெட்ரிக் பள்ளி அணியும், ஜமீன் ஊத்துக்குளி அரசுப்பள்ளி பள்ளி அணியும் மோதியது. அதில் பி.கே.டி. அணி வெற்றி பெற்றது. 19 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவு கால்பந்து போட்டியில் ருக்குமணி அம்மாள் பள்ளி அணியும், பி.கே.டி. பள்ளி அணியும் மோதியது. இதில் ருக்குமணி அம்மாள் பள்ளி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து