Advertisement

50 டூவீலர் திருடிய தமிழகத்தை சேர்ந்த 5 பலே திருடர்கள் கைது

மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 27,2022 | 00:00 IST

Share

புதுச்சேரியில் வாகன திருட்டு அதிகரித்து வரும் நிலையில், வாகன திருட்டை தடுக்க எஸ்பி தீபிகா,. வாகனத் திருட்டைதடுக்க உத்தரவிட்டார். உருளையன்பேட்டை போலீஸ் சரகத்தில் 02 -ந் தேதி பண்ருட்டி திடீர் குப்பம் சேர்ந்த 22 வயதான வல்லரசு , பண்ருட்டி முருங்கப்பாக்கம் ரோடு சுபாஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரித்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் பல்வேறு இடங்களில் டூவீலர்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர். வல்லரசு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் சிவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கரி சஞ்சய் என்பவரை போலீசார் 19-ந் தேதி கைது செய்து மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர். கரி சஞ்சயை போலீசார் விசாரணை செய்தனர், அப்பொழுது விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமணி மற்றும் சரத் ஆகியோருக்கும் டூவீலர் திருட்டில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களையும் கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் 3 ஆண்டுகளாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 50 மோட்டார் சைக்கிள்களை திருடியதை ஒப்புக் கொண்டனர். 50 மோட்டார் சைக்கிள்களையும் உருளைன்பேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X