மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 28,2022 | 00:00 IST
திருச்சியில் தமிழ்நாடு ஹாக்கி சம்மேளனம் சார்பில் ஜமால் முகமது கோப்பைக்கான தென்னிந்திய கிரிக்கெட் போட்டி அக்கல்லுாரி மைதானத்தில் துவங்கியது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 18 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. முதலாவது போட்டியில் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி அணியும், கோவை பிஎஸ்ஜி கல்லூரி அணியும் மோதியது. அதில் 2-0 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி கல்லூரி அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றிபெறும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. நாக் அவுட் முறையில் நடத்தப்படும் போட்டி வரும் நாளை நிறைவு பெறுகிறது.
வாசகர் கருத்து