அரசியல் ஆகஸ்ட் 28,2022 | 14:19 IST
குஜராத்தின் பூஜ் பகுதியில் கடந்த 2001ல் நாட்டின் 52வது குடியரசு தினத்தன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 13 ஆயிரம் பேர் வரை இறந்தனர். 1.7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் நினைவாக பூஜ் பகுதியில் 470 ஏக்கர் பரப்பளவில் ஸ்மிருதி வான் 2001 என்ற நினைவகம் மற்றும் அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து