மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 28,2022 | 00:00 IST
நாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு ஒத்திகை மற்றும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்டால் தடுப்பது குறித்து போலீசாருக்கான பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. டிஎஸ்பி தேன்மொழி வேல் தலைமை வகித்தார். ஆயுத பயிற்சி குழுவை சேர்ந்த போலீசார் ஆயுதங்களை கையாள்வது, ரப்பர் குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது குறித்து பயிற்சி அளித்தனர். இதில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து