மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 28,2022 | 00:00 IST
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கீழக்கல்பூண்டி கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் அனுமதி இன்றி மணல் திருடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரோந்தில் ஈடுபட்டபோலீசார் வெள்ளாற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் (28), புலிக்கரைம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (29),மணிரத்தனம் உள்ளிட்ட 4 பேரை போலீசார் பிடித்தனர். ராமநத்தம் போலீசார் நான்கு பேரையும் கைது செய்து ஒரு ஜேசிபி, ஒரு மினி லாரி, ஒரு டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்து செய்துள்ளனர்.
வாசகர் கருத்து