மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 28,2022 | 00:00 IST
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் பௌர்ணமி தேர் கும்பாபபிேஷக திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். விழாவில் பொம்மலாட்டத்துடன் சிங்காரி மேளம், செண்டை மேளம், கயிலை வாத்தியம் நடைபெற்றது. தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து